கண் திறக்க மறுத்தது என் காலை விடியலில்
நீயிருந்தாய் என் கண்ணின் கருவிழியில்
நீர்த்துளிகள் நீங்க மறுத்தது நான் குளிக்கையில்
உன் வியர்வை மிச்சமிருந்தது என்னுடலில்
உன்னாடையில் உயிரிருந்தது நான் மடிக்கையில்
அதனால் நழுவியது என்னை கட்டிக்கொள்ளும் ஆசையில்
கை வலித்தது உணவு கிண்டும் வேளையில்
சகித்துக்கொண்டேன் அது உனக்காக என்று கருதுகையில்
தினம் கடவுளுக்காக கொளுத்தினேன் ஒளிரும் தீபத்தை
என் மனதில் கடவுளாக வைத்திருக்கிறேன் உன் ரூபத்தை
முறைக்கத் தொடங்கினேன் அந்த வாசல்கதவை நோக்கி
தவிக்கிறேன் ஏங்குகிறேன் ஒவ்வொரு நொடியும் உன் வரவை நோக்கி
சிரிக்கிறேன் விளையாடுகிறேன் கோபிக்கிறேன் உன்னுடனிருக்கையில்
என்னை குழந்தையாக பாவிக்கிறாய் நான் காட்டும் பாவங்களில்
கண் மூட மறுத்தது என் இரவு வேளையில்
நீயிருந்தாய் என் கண்ணின் முன்னில்
நான் சொன்னதை சில நிமிடங்களில் வரிகளாய் படித்தாய்
தினமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நீ நினைவுகளாய் இருந்தாய்
0 கமெண்ட்ஸ்:
Post a Comment