"நம்முடைய முதன்மையான எதிரி குழாய் தண்ணீர்தான்"
-ராபர்ட் எஸ்.மோரிசன் (PepsiCo)
சில நாட்களுக்கு முன்பு Annie Leonard என்ற அமெரிக்க சுற்றுசூழல் ஆர்வலர் எடுத்த "The Story of Bottled Water" என்கிற குறும் படத்தை யு ட்யுபில் பார்த்தேன். நாம் அன்றாடம் வாங்கிக் குடிக்கும் பாட்டில் தண்ணீரை தயாரிக்கும் பெப்சி , கோககோலா போன்ற நிறுவனங்களின் வியாபார முகத்திரையை அதில் கிழி கிழியென்று கிழித்து தொங்க விட்டுருந்தார். கவர்ச்சியான விளம்பரங்களாலும் கண்கவர் பாட்டில் வடிவங்களாலும், மக்களின் மனதில் இந்நிறுவனங்களின் தண்ணீர்தான் உலகத்திலேயே சுத்தமானது என்று பதித்தாலும், அவை குழாய் தண்ணீர்தானே தவிர வேறொன்றுமில்லை என்பது நிதர்சனம்.
சில குறிப்புகள் :
- வருடத்திற்கு 60 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 2 லட்சத்து அறுபதாயிரம் கோடி) புழங்கும் தொழில் இது. இதில் அமெரிக்கர்கள்தான் அதிகம் குடித்து தீர்க்கிறார்கள்.
- குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீருக்கு 2000 மடங்கு அதிக விலை கொடுக்கிறோம்.. ஒரு இட்லியை 2000 ருபாய் கொடுத்து வாங்குவதுப்போலத்தான் இது..
- உலகில் அமெரிக்கர்கள்( மட்டும்!) குடித்துத் தூக்கி எறியும் பாட்டில்களைக் கொண்டு பூமியை 5 முறை வலம் வரலாம்
- சுத்தமான, சுகாதாரமான மலைத்தொடர்களிளிருந்து தருவிக்கப்பட்டது என்று விளம்பரம் செய்யபட்டலும், 25 - 50 விழுக்காடு பாட்டில் தண்ணீர், குழாயிலிருந்து பிடிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கபடுகின்றன.
- தற்போது 1000 கோடிக்கும் அதிகமான மக்கள் சுத்தமான குடி நீருக்கு வழியின்றி வாழ்கிறார்கள்.
எப்படி நடந்தது இது??
இவ்விளம்பரத்தில், கீழே கொடுக்கப்பட்ட வாசகங்கள் இவை. "உலகத்திலேயே பாட்டில் குடிநீர் ஒன்றுதான் சுற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தயாரிக்கபடுகிறது". நிஜத்தில், ஒவ்வொரு ஆண்டும் பாட்டில்களை தயாரிக்க பயன்படும் எரிபொருளை கொண்டு, 10 லட்சம் கார்களை நிரப்பலாம். ஓழுங்கின்மை கோட்பாட்டின்படி (Choas Theory) இதன் பின்விளைவுகளை கணக்கிட்டால் உலகவெப்பஏற்றத்தில் 2 விழுக்காடு இப்பாட்டில்கள் தயாரிப்பதில் மூலமாகவே அதிகரிக்கிறது.
இப்படி தயாரிக்கப்படும் பாட்டில் குடிநீரை இரெண்டே நிமிடத்தில் குடித்துவிட்டு தூக்கி எறிகிறோம். அதன்பிறகுதான் உண்மையான தலைவலி ஆரம்பிக்கிறது.
மூன்றாவது ஸ்டெப் - அப்புறபடுத்துதல்:
என்னத்தான் பாட்டில்களை "மறுசுழற்சி" செய்வதாக கம்பெனிகள் தலையிலடித்து சத்தியம் செய்தாலும், வெறும் 20 விழுக்காடு மட்டுமே கண்துடைப்புக்காக செய்யப்படுகிறது. மீதி??. பள்ளம் தோண்டி புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கபடுகிறது. முன்னதில், நிலங்கள் நிரந்தரமாக பாதிப்படைகிறது. பின்னதில், எரிப்பதினால் வெளிவரும் கார்பன் மோனாக்சைடு ஓசோன் மண்டலத்தில் ஓட்டையை போடுகிறது.
சரி, அந்த 20 விழுக்காடு பாட்டில்கள் என்ன ஆகிறது??. அதை அப்படியே பார்சல் செய்து இந்தியாவுக்கு மிகப்பெரிய கன்டெய்னர்களில் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். எங்கே?. சென்னைக்கு. சென்னை புறநகர் பகுதிகளில் மலைப்போல் பாட்டில்கள் குவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். அமெரிக்கா இத்தனை சுத்தமான நாடாக விளங்குவது இப்போது புரிகிறதா?. அந்த சிதைந்த பாட்டில்களும் திரும்ப மறுசுழற்சி செய்யப்பட்டு புது பாட்டில்களாக வருமென்று நீங்கள் நினைத்தால்..... sorry.... அவை தூள்தூளாக உடைக்கப்பட்டு எரிக்கபடுகின்றன.
இப்படியாக நம்மை பயப்படுத்தியும், அச்சுறுத்தியும், மயக்கியுமே பாட்டில் குடிநீர் அன்றாடம் நம் தலையில் கட்டப்படுகிறது. அவர்களுக்கு சகபோட்டியாளர்களை விட குழாய் தண்ணீர்தான் முக்கியமான எதிரி. திரும்பத்திரும்ப குழாய் தண்ணீரைப்பற்றி குறைகூறி குதிரைக்கு கடிவாளம் போட்டாற்போல் அக்கம்பக்கம் நம்மை சிந்திக்க விடாமல் செய்வது அவர்களுக்கு வியாபாரம் தரக்கூடிய ஒன்று.
ஓர் உதாரணம். பெப்சிகோவின் துணை முதல்வர் ராபர்ட் எஸ்.மோரிசன் நியூயார்க் டைம்ஸ்க்கு( ஆகஸ்ட், 2000) அளித்த பேட்டியில் "நம்முடைய முதன்மையான எதிரி குழாய் தண்ணீர்தான்" என்று உளறியிருந்தார். குழாய் தண்ணீர்தான் Aquafinaவாக உருவெடுப்பது உலகறிந்த ஒன்று என்பதால் அவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் உலகெங்கும் பறந்தது. பல நீர்நிலைகள் அசுத்தமானதற்கு காரணமே இப்பாட்டில் கம்பெனிகள் வெளியிடும் கழிவுப்பொருள்களதான் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு தீர்வுகள் :
மேலதிக்க விபரங்கள் :
http://www.tappedthefilm.com/
http://storyofstuff.org/
எந்த ஒரு பொருளும் விற்பனையாக "Manufactured Demand" என்ற நிலையை நுகர்வோரிடம் உருவாக்கவேண்டும். 1970களில் குளிர்பான நிறுவனங்களின் வருமானம், முன்னேற்றத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மந்தமாக இருந்தது. குளிபானங்களில் உள்ள கரியமிலவாயு (CO2), உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்று விழிப்புணர்வு பெற்ற மக்கள், மெல்ல மெல்ல சாதாரண குழாய் தண்ணீருக்கு திரும்பிய காலம். கையை பிசைந்து கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் மூளையயும் கசக்கி "கண்டுப்பிடித்ததுதான்" பாட்டில் தண்ணீர். முதலில் இலவசமாக கிடைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க மறுத்த மக்களை வழிக்கு கொண்டுவர பயன்படுத்திய யுக்தி "Manufactured Demand".
முதல் ஸ்டெப் - பயமுறுத்துதல்:
மக்கள் மனதில் பயத்தை உருவாகுவது. திரும்பத் திரும்ப "குழாய் தண்ணீர் கொடிய வியாதிகளை பரப்பக்கூடியது" என்றும் "தங்களுடைய பாட்டில் தண்ணீர்தான் சுத்தமானது" என்று கடை பரப்பியது முன்னணி நிறுவங்கள். இன்னொன்று ஒருபடி மேல போய் " குழாய் தண்ணீர் குளிப்பதற்கும், பாத்திரங்கள் கழுவ மட்டுமே!" என்று காமெடி பண்ணியது. ஏற்கனவே உலகப்போர்களில் பாதிக்கப்பட்ட மேல்தட்டு மக்கள் அவசர அவசரமாக வாங்கி விழுங்க ஆரம்பித்தார்கள். படிப் படியாக பெரும்பாலான அடித்தட்டு இந்த வலையில் வீழ்ந்தார்கள். போகப்போக குடித்தண்ணீரே பாட்டில்களின்தான் இருக்கிறது என்ற பிரமையை உருவாகினார்கள்.
இரண்டாவது ஸ்டெப் - மயக்குதல் :

பாட்டில் தண்ணீரின் லேபிள்களைக் கவனித்ததுண்டா? தூரத்து பனிமலைகளும் சிற்றோடைகளும் பச்சைபசேலென்ற அடர்த்தியான காடுகளும் நிரம்பிய படமாயிருக்கும். உண்மையில் அவை குழாய் தண்ணீர்தான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் குளிர்பான ஜாம்பவான்களான Aquafina (Pepsi), Dasani (Cocacola) போன்றோரின் முகத்திரை கிழிந்தது. 2004ல் கோககோலா, தங்களுடைய தயாரிப்பு குழாய் தண்ணீர்தான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. 2008ல் Nestle Pure Life கீழ்கண்ட முழுப்பக்க விளம்பரத்தை பிரபல பத்திரிக்கைகளான Globe மற்றும் Mail ல் வெளியிட்டு பெரும்புயலை கிளப்பியது.
இவ்விளம்பரத்தில், கீழே கொடுக்கப்பட்ட வாசகங்கள் இவை. "உலகத்திலேயே பாட்டில் குடிநீர் ஒன்றுதான் சுற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தயாரிக்கபடுகிறது". நிஜத்தில், ஒவ்வொரு ஆண்டும் பாட்டில்களை தயாரிக்க பயன்படும் எரிபொருளை கொண்டு, 10 லட்சம் கார்களை நிரப்பலாம். ஓழுங்கின்மை கோட்பாட்டின்படி (Choas Theory) இதன் பின்விளைவுகளை கணக்கிட்டால் உலகவெப்பஏற்றத்தில் 2 விழுக்காடு இப்பாட்டில்கள் தயாரிப்பதில் மூலமாகவே அதிகரிக்கிறது.
இப்படி தயாரிக்கப்படும் பாட்டில் குடிநீரை இரெண்டே நிமிடத்தில் குடித்துவிட்டு தூக்கி எறிகிறோம். அதன்பிறகுதான் உண்மையான தலைவலி ஆரம்பிக்கிறது.
மூன்றாவது ஸ்டெப் - அப்புறபடுத்துதல்:
என்னத்தான் பாட்டில்களை "மறுசுழற்சி" செய்வதாக கம்பெனிகள் தலையிலடித்து சத்தியம் செய்தாலும், வெறும் 20 விழுக்காடு மட்டுமே கண்துடைப்புக்காக செய்யப்படுகிறது. மீதி??. பள்ளம் தோண்டி புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கபடுகிறது. முன்னதில், நிலங்கள் நிரந்தரமாக பாதிப்படைகிறது. பின்னதில், எரிப்பதினால் வெளிவரும் கார்பன் மோனாக்சைடு ஓசோன் மண்டலத்தில் ஓட்டையை போடுகிறது.
சரி, அந்த 20 விழுக்காடு பாட்டில்கள் என்ன ஆகிறது??. அதை அப்படியே பார்சல் செய்து இந்தியாவுக்கு மிகப்பெரிய கன்டெய்னர்களில் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். எங்கே?. சென்னைக்கு. சென்னை புறநகர் பகுதிகளில் மலைப்போல் பாட்டில்கள் குவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். அமெரிக்கா இத்தனை சுத்தமான நாடாக விளங்குவது இப்போது புரிகிறதா?. அந்த சிதைந்த பாட்டில்களும் திரும்ப மறுசுழற்சி செய்யப்பட்டு புது பாட்டில்களாக வருமென்று நீங்கள் நினைத்தால்..... sorry.... அவை தூள்தூளாக உடைக்கப்பட்டு எரிக்கபடுகின்றன.
இப்படியாக நம்மை பயப்படுத்தியும், அச்சுறுத்தியும், மயக்கியுமே பாட்டில் குடிநீர் அன்றாடம் நம் தலையில் கட்டப்படுகிறது. அவர்களுக்கு சகபோட்டியாளர்களை விட குழாய் தண்ணீர்தான் முக்கியமான எதிரி. திரும்பத்திரும்ப குழாய் தண்ணீரைப்பற்றி குறைகூறி குதிரைக்கு கடிவாளம் போட்டாற்போல் அக்கம்பக்கம் நம்மை சிந்திக்க விடாமல் செய்வது அவர்களுக்கு வியாபாரம் தரக்கூடிய ஒன்று.
ஓர் உதாரணம். பெப்சிகோவின் துணை முதல்வர் ராபர்ட் எஸ்.மோரிசன் நியூயார்க் டைம்ஸ்க்கு( ஆகஸ்ட், 2000) அளித்த பேட்டியில் "நம்முடைய முதன்மையான எதிரி குழாய் தண்ணீர்தான்" என்று உளறியிருந்தார். குழாய் தண்ணீர்தான் Aquafinaவாக உருவெடுப்பது உலகறிந்த ஒன்று என்பதால் அவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் உலகெங்கும் பறந்தது. பல நீர்நிலைகள் அசுத்தமானதற்கு காரணமே இப்பாட்டில் கம்பெனிகள் வெளியிடும் கழிவுப்பொருள்களதான் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு தீர்வுகள் :
- முதலில் பாட்டில் குடிநீருக்கு "நோ" சொல்லுங்கள்.
- நீங்கள் மட்டும் நிறுத்தாமல் உங்களுடைய நண்பர்களையும் அறிவுறுத்துங்கள். நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும், அருகாமையில் உள்ள பள்ளிகளிலும் இதுப்பற்றி தெரியப்படுத்துங்கள்.
- வீட்டிலேயே Aquaguard போன்ற கருவிகளை பயன்படுத்தி குழாய் நீரை தூய்மைப்படுத்தலாம்.
மேலதிக்க விபரங்கள் :
http://www.tappedthefilm.com/
http://storyofstuff.org/
கேட்ச் : இந்த கட்டுரை புடிச்சிருந்தா கண்டிப்பா வோட்ட குத்துங்க தல!! (புடிகாட்டியும் குத்துங்களேன். காசா பணமா?)
14 கமெண்ட்ஸ்:
நல்ல இடுகை. பயனுள்ள நடைமுறைப் படுத்தக் கூடியத் தீர்வு. நானும் என் மாணவர்களுக்கு அறிவுருத்துகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்
good post. thanks
தண்ணியை வித்தே பில்லியனர்களா ஆகிட்டாங்க பலர்.
சென்னையில் Zero B ன்னு ஒரு ஃபில்டர் போட்டுருக்கோம். அதுதான் குடிக்க, சமையலுக்கு பயன்படுது.
எங்கூருக்குத் திரும்புனவுடன், குழாய்த்தண்ணீரை அப்படியே பிடிச்சுக் குடிக்கலாம். உலகின் தூய்மையான தண்ணீரில் எங்க ஊருதும் ஒன்னு.
விண்ணப்பம்: வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டு மாடரேஷன் போட்டுக்குங்க.
அது ஒரு நந்தி.
அனைவருக்கும் பயனான தகவல்கள், சமுதாய விழிப்புணர்வும் சேர்ந்தே இருக்கிறது..
வாழ்த்துகள்
nice post. thanks
நல்ல தகவல். இப்போது எல்லா மக்களும் பெருமைக்காகவே சம்பாதிக்கும் பணத்தை முக்கியமாக வெளிநாட்டு கம்பெனிக்கு அழுகிறாகள் என்ன செய்ய, எல்லாம் கால கொடுமை....
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்ல தகவல் தோழா .
மதுரை சரவணன் :
மிக்க நன்றி சரவணன்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Ravi :
ரொம்ப நன்றி ரவி.
துளசி கோபால் :
ஆமாங்க.. ரொம்ப நிஜம்..இங்க பெங்களுருல பரவால்ல.. நல்ல சுத்தமான தண்ணி.. அப்புறம் உங்க யோசனைபடி மாடரேஷன் போட்டுட்டேன் .. ஆமா நமக்கு எந்த ஊரு?
நிகழ்காலத்தில்... :
ரொம்ப நன்றி (என்ன சொல்லி கூப்புடறது??) ....
Rajasurian :
நன்றி ராஜசூரியன்
புனிதா :
ரொம்ப நன்றி புனிதா..filmics பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது. உடனே சேர்ந்து விட்டேன். தகவலுக்கு நன்றி..
@prasanna
தேங்க்ஸ் மச்சி..
GOOD POST
//ஆமா நமக்கு எந்த ஊரு?//
இங்கெதான் பக்கத்துலே....பெருசாச் சொல்லிக்க முடியாம சிறிய நாடு.
நியூஸிலாந்து.
@துளசி கோபால்
ஹி ஹி...
ஆஹா !
அருமையான பதிவு!!
நண்பரே... இதே போன்ற இதைப்பற்றிய ஒரு பதிவு... கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஸாரி..
Post a Comment